Wednesday, May 16, 2012

சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இன்னமும் உள்ளனர் - பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

Wednesday,May, 16, 2012
இலங்கை::இராணுவத்தினரிடம் சரணடையாத புலி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் இருப்பதாகவும் தினமும் ஆயுதங்கள் மீட்கப்படுவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சரணடையாதவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள கோத்தபாய, இதன் மூலம் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தில் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் இயங்கும் அமைப்புகள் இலங்கையை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல முயற்சித்து வருகின்றன. இவ்வாறான நிலைமையில், புலிகள் அமைப்பு மீண்டும் ஒரு முறை ஒன்று சேர இடமுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment