Monday, ,May, 28, 2012சென்னை::இலங்கை அதிபர் ராஜபட்ச சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது:(புலி விசுவாசி) திமுக தலைவர் கருணாநிதி வேதனை!
வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது என்று அந்த நாட்டின் அதிபர் ராஜபட்ச சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதைப் போல உள்ளது என்று திமுக தலைவர்(புலி விசுவாசி)கருணாநிதி வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி :- இலங்கைத் தமிழர்களுக்கு “தனித் தமிழ் ஈழம்” அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப் பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?
கருணாநிதி :- அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011ஆம் ஆண்டுக் கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட் டிருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங் களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம். குறிப்பாக, “தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலைகளை நிகழ்த்தி வருகின்றன. இதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன. அரசியல் நோக்கம் கருதி இந்தக் குழுக்கள் இயங்குகின்றன. விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என கருதப்படுவோர் துன்புறுத்தப் படுகிறார்கள். ஏராளமானவர்கள் காணாமல் போவது இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளது. முந்தைய ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் காணாமல் போயுள்ளனர். இதற்கு அரசு தரப்பில் எந்தப் பொறுப்பும் ஏற்கப்படவில்லை. சிங்கள ராணுவக் கண்காணிப்பில் தடுப்பு முகாம்களில்
வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் துன்பப்படுத்தப் படுகின்றனர். அரசு அதிகாரிகளால் பொது மக்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படு கிறார்கள். இவ்வாறு கைது செய்யப்படுவோரில் பலர் விசாரணையின் போது மரணம் அடைந்துள்ளனர். நீதி விசாரணையின்றி ஏராளமான தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். உண்மையான நீதி மறுக்கப்படுவது பெரும்
பிரச்னையாக உள்ளது. தமிழர்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிடுகிறது. பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படு கிறது. கருத்து சுதந்திரம், ஒன்று கூடும் உரிமை, நடமாடும் சுதந்திரம் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களை கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக இன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது.
மேலும் இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதர் ஜான் ரான்கின், இலங்கையில் தமிழர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை ராணுவம் அதிகம் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதுபற்றி இன்று “தினமணி” வெளியிட்ட செய்தியில், “ஈழத் தமிழர்களுக்கு எதிராக கொடூரங்களை நிகழ்த்துவதாக இலங்கை அரசின் மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், பிரிட்டிஷ் தூதர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக் காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ள இப்படிப் பட்ட கருத்துக்களுக்கிடையே இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே,
வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து வாபஸ் பெற முடியாது” என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதையெல்லாம் பற்றி விவாதித்து முடிவெடுக்கத்தான் “டெசோ” மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித்திருக்கிறோம்.
கேள்வி :- பெட்ரோல் விலை உயர்வுக் காக தி.மு. கழகம் 30ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்றதும், அ.தி.மு.க. அவசரமாக 29ஆம் தேதியன்று ஆர்ப் பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறதே?
கருணாநிதி :- மேற்கு வங்க முதலமைச்சரும், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே அங்கமாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவியுமான மம்தா பானர்ஜி தனது தலைமை யிலே கொல்கத்தா தலைநகரில் பெட்ரோல் விலை உயர்வைக் குறைக்க வேண்டுமென்று கோரி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே பேரணியில் சென்றிருக்கிறார்.
பா.ஜ.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 31ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்து விட்டார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் எனது தலைமையிலே தென் சென்னையிலும், மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும் 30ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்து
விட்டோம். இவ்வள விற்கும் பிறகு அ.தி.மு.க. என்னதான் செய்வது? வேறு வழியின்றி 29ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஆர்ப்பாட்டத்திற்கான அறிக்கையை விடுத்துள்ள ஜெயலலிதா போகிற போக்கில் தி.மு. கழகத்தின் மீதும் என் மீதும் தேவையில்லாமல் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். குறிப்பாக “மத்திய அரசைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக் கும் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, மத்திய அரசை வலியுறுத்தி இந்தப் பெட்ரோல் விலை உயர்வைத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலையைக் குறைக்கக் கோரி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித் திருப்பது கண் துடைப்பு நாடகம்” என்று கூறியிருக் கிறார். மத்திய அரசை வலியுறுத்திடத்தான் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை என் தலைமையிலேயே நடத்துகிறது. ஆனால் ஜெயலலிதா மின் கட்டண, பஸ் கட்டண, பால்
விலை உயர்வுகளைக் கூடத் திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் நம்மைக் கேலி செய்கிறார். நல்ல கண் துடைப்பு கபட நாடகம். ஒருவேளை தி.மு. கழகத்தையே பெட்ரோல் விலையைக் குறைத்து அறிவிப்பு செய்யச் சொல்கிறாரா? ஜெயலலிதா தோழமை சேர துடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆளும் சிறிய மாநிலமான கோவாவில் ஜெயலலிதாவைப் போல மத்திய அரசையோ, அதிலே அங்கம் வகிக்கும் கட்சிகளையோ குறை சொல்லி அறிக்கை விட்டுக் கொண்டிராமல் அந்த மாநில அரசே உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது பெட்ரோல் விலை உயர்வால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருதி, கோவா மாநில அரசு, பெட்ரோலுக்கு விதிக்கப்படும் “வாட்” வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக டெல்லியை விட, கோவாவில் லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது என்று இன்று செய்தி வெளி வந்திருக்கிறது. உண்மையிலேயே பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் மீது ஜெயலலிதாவிற்கு அக்கறை இருக்குமானால், கோவா மாநிலத்தில் செய்ததைப் போல, தமிழகத்திலேயும் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க இதற்குள் முன் வந்திருக்க வேண்டாமா? இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, மத்திய அரசு 2006ஆம் ஆண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்திய போதும், 2008ஆம் ஆண்டு டீசல் விலையை உயர்த்திய போதும், கழக
அரசு விற்பனை வரியைக் குறைத்து அறிவிப்பு செய்திருக்கிறது. ஆனால் அப்போதும் ஜெயலலிதா ஆளுங் கட்சியாக இருந்த தி.மு. கழகத்தைத் தாக்கி அறிக்கை விடுவதிலேதான் முனைப்பாக இருந்தார். குறிப்பாக 14-2-2008 அன்றும், 2-7-
2009 அன்றும் ஜெயலலிதா விடுத்த அறிக்கைகளில், “பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு என்ற அதிர்ச்சியில் இருந்து பொது மக்களை மீட்பது என்பது, வரிகளை ஒழுங்குபடுத்தும் மத்திய, மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கும் உட்பட்டுத்தான் இருக்கிறது, மத்திய மாநில அரசுகள் இதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், கவலைப்படாமல் இருப்பது வாக்களித்த மக்கள் மீது
அவர்களுக்கு எள்ளளவும் அக்கறை இல்லை என்பதைத்தான் காட்டுகிறது” என்று குறிப்பிட்டதை தற்போது அவருக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். அவர் கூறிய யோசனையை அவரே தற்போது நடைமுறைப்படுத்த முன்வராமல், கழகத்தையும் என்னையும் குறை கூறி கண்டன அறிக்கை கொடுத்து விட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டிருப்பதுதான் உண்மையான “கண் துடைப்பு நாடகம்” என்பதை நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.
கேள்வி :- தி.மு. கழக அரசு காலத்தில் கட்டிய தலைமைச் செயலகக் கட்டிடத்தையும், அண்ணா நூற்றாண்டு நினைவு
நூலகத்தையும் ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்றும், தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட பிளாக் பி கட்டிடங்களில் மருத்துவக் கல்லூரியை தொடங்கப் போவ தாகவும் ஜெயலலிதா அறிவிக்கிறாரே, கழக ஆட்சியில் மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்காக எதையும் செய்யவில்லையா?
கருணாநிதி :- தமிழகத்தில் மருத்துவமனை பற்றாக்குறையாக உள்ளது என்பதற்காகவோ, மருத்துவக் கல்லூரியே இல்லை என்பதற் காகவோ தமிழகமுதலமைச்சர் இந்தக் கட்டி டங்களை மருத்துவ மனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப் போவதாகச் சொல்ல வில்லை. என்னுடைய தலைமையில் இருந்த கழக அரசு காலத்தில் இந்தக் கட்டிடங்கள்
எல்லாம் கட்டப்பட்டன என்ற ஒரே காரணத்திற்காகத்தான், அவைகளை யெல்லாம் இடிக்க வேண்டும் என்று சொல்ல இயலாமல், மாற்றாக மருத்துவமனையாக மாற்றப் போவதாகச் சொல்லி வருகிறார். நல்ல வேளையாக, சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு எதிரே இருந்து, தற்போது புழலுக்கு மாற்றப்பட்ட மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் என்ன
செய்வதென்று கழக ஆட்சியில் யோசித்த போது, அங்கே சென்னை மருத்துவக் கல்லூரிக்குப் புதிய கட்டிடம், கூட்ட அரங்கம், மருத்துவக் கல்லூரி மாணவர் களுக்குத் தங்கும் விடுதிகள் போன்றவை 76 கோடி ரூபாய் செலவில் கட்டப்படத் திட்டமிட்டு, நிதியும் ஒதுக்கி அங்கே பணிகள் நடைபெற்று வருவது ஜெயலலிதாவுக் குத் தெரியாது போலும்! கழக ஆட்சியில்
நிறுவப்பட்ட திட்டம் என்று யாராவது அவரிடம் சொல்லியிருந்தால், அங்கே தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவை மாற்றப் போகிறேன் என்று சொன்னாலும் சொல்லியிருப்பார். அதுபோலவே தான் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்காக வேப்பேரியில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு கட்டப்பட்டு முடிவடைந்து, திறப்பு விழாவுக்கான தேதிக்காக காத்திருக்கிறது. ஒருவேளை அதையும் மருத்துவமனையாக மாற்றும் யோசனையில்தான் திறப்பு விழாவுக்கான தேதி கொடுக்காமல் முதல் அமைச்சர் இருக்கிறாரோ என்னவோ?
No comments:
Post a Comment