Sunday, May, 20, 2012இலங்கை::முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த ஆவணத்தில் ஜனாதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை கையொப்பமிட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்டாருக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி குறித்த ஆவணத்தை தமது பிரதம அதிகாரி காமினி செனரத்னவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் நாளை நீதி அமைச்சிடம் கையளிக்கப்படும் என ஊடகப் பேச்சாளர் பந்துல ஜயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டமை தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment