Thursday, May 31, 2012

பிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்-அருண் தம்பிமுத்து!

Thursday,May,31,2012
இலங்கை::பிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை ஜனாதிபதியின் ஆலோசகரான அருண் தம்பிமுத்து விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளினால் 1988ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்துவின் மகனான அருண் தம்பிமுத்து, ஏனைய சமூகங்களை போல நாட்டு விவகாரங்களில் தமிழ் இளைஞர்களும் பங்குபற்றும் நிலைமையயை உருவாக்குவNது இந்த இயக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

சகல சமூகத்தி;னரும் சமாதானமாக வாழும் நல்லிணக்கத்தை கொண்டுவருவதே இந்த இயக்கத்தின் பிரதான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தியிலும் வேறு செயற்பாடுகளிலும் தாம் பங்குதாரர்களாகும் வகையிலும் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதிலும் ஆர்வமுள்ள பெருமளவானோர் ஐரோப்பாவிலும் வேறு இடங்களிலும் உள்ளனர். இவர்களுக்கான அரங்கம் ஒன்றை ஏற்படுத்தவே இந்த அமைப்பை தோற்றுவிக்கவுள்ளதாக அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

இவர்கள் தமது அபிலாஷைகளை தெரியப்படுத்த விரும்புகின்றனர். இதனால் தான் அவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என நான் நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களுக்கு பணிந்து போவதும் தீவிரவாத போக்கு மீண்டும் திரும்புவதும் கவலையளிக்கும் விடயங்களாகும் என அவர் தெரிவித்தார்.

பொது எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் இரா.சம்பந்தன் தேசிய கொடியை வைத்திருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மாவை சேனாதிராஜா இது தொடர்பில் வருத்தம் தெரிவித்ததோடு சகல நம்பிக்கைகளும் நொறுங்கிப் போயின என அருண் தம்பிமுத்து மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment