Thursday, May 24, 2012

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - விக்டோரியா நூலாண்ட்!

Thursday, May, 24, 2012
இலங்கை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு ரீதியான தீர்வுத் திட்டம் என்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் யோசனையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நூலாண்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை அமெரிக்கா முழுமையாக ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளி;த்த போது விக்டோரியா நூலாண்ட் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தீர்மானம் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment