Saturday, May, 19, 2012சென்னை::சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இலங்கை துணை தூதரகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது இன்னும் திறக்கப்படவில்லை. இலங்கையில் நடந்த போரில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காரணமான இலங்கை அரசையும் அதற்கு துணை போன இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் பேராயன் அமைப்பினர் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் திறக்கப்படாத இலங்கை துணை தூதரக கட்டிடத்தை இழுத்து மூட சென்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், அமைப்பின் தலைவர் சோழ நாடன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்ட 25 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
No comments:
Post a Comment