Tuesday, April, 17, 2012இலங்கை::உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மலேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் சேவைகள் 2012 என்னும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் நோக்கில் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் மலேசியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் இந்த விஜயத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இந்த கருத்தரங்கு இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment