Friday, April, 27, 2012இலங்கை::யாழ்ப்பாணம் பளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு சகோதரர்களினதும் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளன.
வீடொன்றின் முற்றத்தில் சிறுவர்கள் உருண்டை வடிவிலான பொருள் ஒன்றை கையிலெடுத்து விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.
இந்த வெடிச்சம்பவத்தில் நான்கு வயது மற்றும் இரண்டரை வயதான இரண்டு பிள்ளைகளே உயிரிழந்துள்ளன.
என்ன வகையான வெடிபொருள் வெடித்துள்ளது என்பது தொடர்பில் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற வெடிபொருட்கள் குறித்து அந்தப் பிரதேசங்களில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கவனக்குறைவு காரணமாகவே இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.
No comments:
Post a Comment