Thursday, April 12, 2012

கடத்தல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை – திசர சமரசிங்க!

Thursday, April 12, 2012
அவுஸ்திரேலியா::கடத்தல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திரச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கையில் இரகசிய காவல்துறையினர் கடத்தல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவல்துறையினரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரேம்குமார் குணரட்னத்தை காவல்துறையினர் கைது செய்யவும் இல்லை அவரை விடுதலை செய்யவும் இல்லை என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment