Friday, April 6, 2012

மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நாடு திரும்ப உள்ளார்?.

Friday, April, 06, 2012
இலங்கை::பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இராஜதந்திரியாக கடமையாற்றி வரும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா, நாடு திரும்ப உள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பிரசன்ன சில்வாவிற்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் குளோபல் தமிழ் போரம் என்ற அமைப்பினால், இவ்வாறு குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா விரைவில் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த காலம் நிறைவடைய உள்ளதாகவும் விரைவில் பிரசன்ன டி சில்வா நாடு திரும்புவார் எனவும் இலங்கை அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 18 மாதங்களாக இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு விவகார இராஜதந்திரியாக பிரசன்ன கடமையாற்றியுள்ளார்.

பிரசன்ன மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment