Thursday, April 05, 2012இலங்கை::அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், சர்வதேச போர்குற்ற விவகாரங்களுக்கான உயர்நிலை அதிகாரி stephen rapp அவர்களின், இலங்கை தொடர்பிலான அறிக்கை, அமெரிக்க செனற்சபையில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
கடந்த சில நாட்களாக இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் புதிய அறிக்கையொன்று வெளிவரவுள்ளதென்ற செய்தி , ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மதியம் செனற்சபைக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை, இலங்கைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமெரிக்க செனற்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள புதிய அறிக்கையானது, இலங்கைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு பயணம் செய்து களஆய்வினை stephen rapp மேற்கொண்டிருந்தார்.
போர்க்குற்ற விவகாரங்களை தற்போது கையாண்டு வரும் stephen rapp அவர்களின் இலங்கை தொடர்பிலான அறிக்கை, இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பில் stephen rapp அவர்களினால் சமர்பிக்கபட்டுளள்ள அறிக்கை தொடர்பில் விரைவில் அமெரிக்க செனற்சபையில் விவாதம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment