Thursday, April 05, 2012இலங்கை::புலிகளின் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் தலைவர் ரத்ரகுமாரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் புலித் தலைவர்கள் மீண்டும் இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் தொடர்பில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூகங்களுக்கு இடையில் சமாதானத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொண்டு வரும் முனைப்புக்களை புலித் தலைவர்கள் சீர்குலைக்கு முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிபயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடித் திரிவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சம்பிக்க ரணவக்க கோரியுள்ளார்.
No comments:
Post a Comment