Saturday, April, 28, 2012இலங்கை::சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் ஒரு தொகை தங்க பிஸ்கட் மற்றும் பணம் ஆகியவற்றுடன் பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணை நேற்றிரிவு கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தியதாகவும் அவரின் பயணப் பொதியிலிருந்து பணம் மற்றும் சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான பெண் வௌ்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், அத்துடன் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மற்றும் பணம் என்பன அரசுடமையாக்கப்பபட்டுள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment