Tuesday, April 3, 2012

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் - ரஸ்யா!

Tuesday, April, 03, 2012
இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமிர் மிக்கேய்லோவ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பாரியளவில் அழுத்தங்களை ஏற்படுத்த வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீhமானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அழுத்தங்கள் அதிகளவில் பிரயோகிக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புறச்சக்திகளின் தலையீடோ அல்லது அழுத்தங்களோ அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டிய அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் என்பதன் மூலம் அதிகாரப் பகிர்வினையா கருதுகின்றீர்கள் என ரஸ்ய தூதுவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதனை இலங்கை உள்நாட்டு ரீதியில் சிந்திக்க வேண்டும் எனவும், அது தொடர்பில் தலையீடு செய்யப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் சகல இன சமூகங்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தீர்வுத் திட்டம் அமைய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

முரண்பாடுகளினால் ஏற்பட்ட காயங்கள் வலுவானவை எனவும், அவற்றை துரித கதியில் ஆற்ற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அவசர அவசரமாக தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டுமென அழுத்தங்களை பிரயோகிப்பது பொருத்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு நாடு அதிகாரப் பகிர்வு என்ற எண்ணக்கருவில் மாற்றம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஒவ்வொரு நாடும் சரியான தீர்வுத் திட்டம் எது என்பதனை அடையாளம் கண்டு அதனை அமுல்படுத்த வேண்டுமென தூதுவர் மிக்கேய்லோவ் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக இந்தியா, ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment