Thursday, April 12, 2012சென்னை::இந்தோனோசியா நில நடுக்கம், தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் நேற்று பரபரப்புடன் காணப்பட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளியில் விடிய விடிய தங்கினர். இன்று காலையில் சகஜ நிலை திரும்ரூ.யது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, மதுரை, சேலம், கன்னியாகுமரி உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் நேற்று ரூ.ற்பகல் 2.15 மணியளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. அலுவலகங்களில் மேஜை, நாற்காலிகள் ஆடின. அடுக்குமாடி குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் அதிர்வை நன்கு உணர்ந்தனர். நிலஅதிர்வு என்று தெரிந்ததும் உடனடியாக கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு வடக்கே கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ரூ.ற்பகல் 1.40 மணியளவில் 8.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 2.08க்கு 8.5 ரிக்டர் அளவிலும், மாலை 4.16க்கு 8.1 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது என்று தெரியவந்தது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்கில் 30 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 1.60 லட்சம் பேர் பலியாயினர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும் இந்தியாவில் 18 ஆயிரத்துக்கு அதிகமானோரும் ஆழிப்பேரலையில் இழுத்து செல்லப்பட்டு பலியானார்கள். அதே சுமத்ரா தீவு பகுதியில் தற்போது பூகம்பம் ஏற்பட்டதால் தமிழகம் முழுக்க சுனாமி பீதி பரவியது. ரிக்டர் அளவின் அடிப்படையில் ஐதராபாத் சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், புதுச்சேரி மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், நெல்லை மாவட்டங்களில் கடலை ஒட்டிய பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது. மாலை 5 மணி அளவில் தமிழக கடலோரத்தை சுனாமி தாக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், கடலோர பகுதிகளில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் வேறு இடங்களுக்கு கொண்டு வரப்பட்டனர். தியேட்டர், ஷாப்ரூ.ங் மால்களில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். செல்போன் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். செல்போன் இணைப்புகள் சீரான ரூ.றகு, சென்னை உள்ளிட்ட கடலோர நகரங்களில் இருந்தவர்களிடம் நிலஅதிர்வு, சுனாமி பீதி பற்றி உறவினர்கள் கேட்டறிந்தனர்.
2004 சுனாமியில் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்ரூ.யார் நகர் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் சுனாமி எச்சரிக்கை செய்யப்பட்டது. கடலுக்குள் சென்றிருந்த மீனவர்களுக்கு உடனடியாக செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டு, கரைக்கு திரும்புமாறு கூறினர். கொள்ளிடம் அடுத்த பழையாறு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றிருந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினர். தூத்துக்குடி, திருச்செந்தூர், குமரியில் வழக்கத்தைவிட கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டன. குமரியில் விவேகானந்தர் மண்டபம், வள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து உடனே நிறுத்தப்பட்டது.சென்னையில் கடற்கரை சாலையில் படிப்படியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பஸ்கள் மாற்று வழியில் திருப்ரூ. விடப்பட்டன. மாடி ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது. கம்ப்யூட்டர் நிறுவனங்கள், கால்சென்டர் நிறுவனங்கள், ரூ.பீஓ சேவை மையங்கள் உள்பட பல்வேறு அலுவலகங்களில் உடனடியாக விடுமுறை அறிவிக்கப்பட்டு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் கிளம்ரூ.யதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்நிலையில், சுமத்ராவில் ஏற்பட்டது சுனாமி ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கம் இல்லை என்று பசிரூ.க் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது. இதையடுத்து, தமிழகத்துக்கு சுனாமி அபாயம் இல்லை என்று ஐதராபாத் மையமும் அறிவித்தது.
ஆனாலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் விடிய விடிய பதற்றத்துடனேயே இருந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகள், உயரமான கட்டிடங்களில் இருந்தவர்கள் விடிய விடிய குழந்தை குட்டிகளுடன் வீடுகளுக்கு வெளியே தூங்கினர். கடலோரங்களிலும் அதை ஒட்டி பகுதிகளிலும் போரூ.சார் தொடர்ந்து ரோந்து சுற்றியபடி இருந்தனர். குமரி மாவட்டம் மேல்மணக்குடி, பள்ளம், வாணியக்குடி, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் அதிகமானோர் நேற்று மாலை அசிசி வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர். விடிய விடிய அங்கு தங்கியிருந்த அவர்கள் இன்று காலை வீடு திரும்ரூ.னர். கடலோர பகுதிகளில் இன்று காலையும் பதற்றமான நிலை காணப்பட்டது. வழக்கமாக அதிகாலை 3 மணியளவில் பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்ரூ.டிக்க செல்வார்கள். மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன் ரூ.டிக்க வேண்டாம் என நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும், சுனாமி பீதியாலும் யாரும் இன்று கடலுக்குள் மீன்ரூ.டிக்க செல்லவில்லை. திருவொற்றியூர் நல்லதண்ணீர்ஓடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், எர்ணாவூர் குப்பம், எண்ணூரில் இந்திரா காந்தி நகர், சின்ன குப்பம், பெரிய குப்பம், தாளங்குப்பம், நெட்டுக்குப்பம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள், கடற்கரையோரத்தில் நிறுத்தியிருந்த படகுகள் மற்றும் மீன்ரூ.டி வலைகளை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்றும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடற்கரை பகுதியில் போரூ.ஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோடியக்கரை, பூம்புகார் பகுதி மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. பல கடற்கரை கிராமங்களில் பள்ளிகளில் மாணவர்கள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது. கடலோர பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது.
No comments:
Post a Comment