Wednesday, April 11, 2012

அமெரிக்காவின் பிரேரணையை ஜெனீவாவில் ஆதரித்து இலங்கைக்கு துரோகமிழைத்த இந்தியாவுன் உறவுகளை நாம் ஏன் பேண வேண்டும் - குணதாச அமரசேகர!

Wednesday,April,11,2012
இலங்கை::இந்திய அசியல் பிரதி நிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை கடுமையாக எதிர்ப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அறிவித்துள்ளது.

எமது உள்நாட்டு பிரச்சினைகளை கண்காணிப்பதற்கு எமக்கு எதிராக இந்தியாவிற்கு இடமளிக்க முடியாதென்றும் அவ்வியக்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் பிரேரணையை ஜெனீவாவில் ஆதரித்து துரோகமிழைத்த இந்தியாவுன் உறவுகளை நாம் ஏன் பேண வேண்டும்.

அத்தோடு எமது நாட்டின் பிரச்சினைகளை தேசிய ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும்.

அதைவிடுத்து இந்திய, அமெரிக்க மொடல்கள் எமக்கு அவசியமில்லை.

அத்தோடு இந்திய பிரதி நிதிகளை இங்கு விஜயத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் இடமளித்திருக்கக் கூடாது.

குட்டக் குட்ட குனிவதால் எம்மை அடக்கியாள முயல்வார்கள்.

அத்தோடு திருகோணமலையில் எண்ணெய்க் குதங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியன் ஒயில் கம்பனி ஆரம்பித்துள்ளது.

இது எமது நாட்டிற்கு பாதகமான நிøமையை உருவாக்கும்.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு பொறுப்புக் கூறும் தன்மையை தனதாக்கிக் கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் எமது பொருளாதாரத்தை இந்தியா தனது கையிலெடுக்கும் ஆபத்தான நிலைமை உருவாகும்.

ஆனால் அரசாங்கம் இவ்விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இந்தியாவிற்கு எதிரான தனது போராட்டங்களை முன்னெடுக்கும்.

இனிமேலும் இந்தியா எமது நட்பு நாடல்ல. பிரதான எதிரி நாடாகும். எனவே அதற்கேற்றாற் போல் தெற்காசியாவில் ராஜதந்திர நடவடிக்கைகளை நாம் நகர்த்த வேண்டுமென்றும் டாக்டர் குணதாச அமசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment