Friday, April 20, 2012

கருணாநிதியின் கோரிக்கைக்கு சம்பிக்க ரணவக்க பதில்!

Friday, April, 20, 2012
இலங்கை::திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார்.

தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்திடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காஸ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பில் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே முதலில் காஸ்மீர் தொடர்பிலான தீர்மானத்திற்கு புது டொல்லி தேர்தல் நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment