Sunday, April 15, 2012

மனித உரிமைகள் தொடர்பில் சமகால மீளாய்வு அறிக்கை!

Sunday, April 15, 2012
இலங்கை::மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச சமகால மீளாய்வு அறிக்கை ஒன்றை இந்த மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முதற்தடவையாக இலங்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இலங்கை குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரச மற்றும் சுயாதீன நிறுவனங்கள் ஒன்றிணைந்து சிறந்த மட்டத்திலான அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமாயின் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு நிலவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிடுகின்றார்.

இந்த அறிக்கையை தயாரிப்பதன் பொருட்டு அரச நிறுவனங்களுக்கு உரிய ஆலோசனைகளை தமது ஆணைக்குழு வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மனித உரிமைகளுக்கான விடயங்களை ஆராய்வதற்காக நீதி உள்ளிட்ட 22 நிறுவனங்களின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதீபா மஹாநாஹேவா தெரிவிக்கிறார்.

மனித உரிகைள் தொடர்பில் உலக நாடுகளால் சமர்ப்பிக்கப்படவுள்ள சமகால விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரை ஜெனீவாவில் ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment