Friday, April 27, 2012

போதைப் பொருள விநியோக சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

Friday, April, 27, 2012
இலங்கை::போதைப் பொருள் விநியோக நிலையமொன்றை நடத்திச் சென்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதியில் சொகுசு தொடர்மாடி வீட்டுத் தொகுதியொன்றின் 10ஆவது மாடியிலுள்ள வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட போதைப் பொருள் விநியோக நிலையத்தை குற்றப் புலணாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் சுற்றிவளைத்தனர்.

இந்த நிலையத்தில் இருந்து மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 500 கிராம் எடையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள், 76 இலட்சத்து 80 ஆயிரம் பணம் மற்றும் போதைப் பொருள் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை குற்றப்புலணாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.

முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர் இந்த நிலையத்தை நடத்திச் சென்றுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும அவர் தற்போது வெளிநாடொன்றில் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment