Saturday, April 7, 2012

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டுள்ளது?

Friday, April, 06, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு விஜயம் செய்வதென முன்னர் நவனீதம்பிள்ளை திட்டமிட்டிருந்தார்.

இலங்கை விஜயத்திற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை, அரசாங்கம் நிராகரித்துள்ளமையே, நவனீதம்பிள்ளையின் விஜயம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதிநிதிகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் வரையில் தமது விஜயத்தைத் n;தாடரப் போவதில்லை என நவனீதம்பிள்ளை தீர்மானித்துள்ளார் என குறித்த கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment