Tuesday, April 10, 2012இலங்கை::பிரேம்குமார் குணரத்ணம் கடத்தப்பட்டமை மற்றும் மீண்டும் விடுவிக்கப்பட்டமை என்பன இலங்கை அரசியல் தன்மையின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும் ஏனைய காணாமல் போன சம்பவங்களின் பண்புகளை காட்டி நிற்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற சமயத்தில் இலங்கைக்கான ஐநாவின் பேச்சாளராக செயற்பட்ட கோர்டன் வொய்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் பலர் காணாமல் போன சம்பவங்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் இயக்கத்துடனான யுத்தம் நிறைவடைந்த பின் கடத்தல்கள், காணாமல் போதல்கள் தொடராது என மக்கள் நினைத்த போதும் சம்பவங்களில் குறைவு இல்லை என கோர்டன் வொய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக காணாமல் போதல் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிவதாக அவர் கூறியுள்ளார்.
கடத்தல் தொடர்பில் உறவினர்கள் வெளி உலகிற்கு கூறியதை அடுத்தே பிரேம்குமார் குணரத்ணம் விடுவிக்கப்பட்டதாக கோர்டன் வொய்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment