Tuesday, April, 03, 2012இலங்கை::அணு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு உற்பத்திகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பீ.பி.சி செய்திவெளியிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உற்பத்தி தொழிற்சாலையில் அணு விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில், அதிலிருந்து வெளியிடப்படும் கதிரியக்கத்தினால் இலங்கையின் மன்னார் மற்றும் வடபகுதிக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என கருதப்படுகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடங்குளம் அணு உற்பத்தித் தொழிற்சாலை மன்னார் கடற்பரப்பினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் மன்னார் வடபகுதிகளில் கதிரியக்கப் பரவல் மற்றும் அதன் தாக்க வீதம் தொடர்பில், தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
அணு உற்பத்தி தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் அயல்நாடான இலங்கையுடன் அது தொடர்பில் கலந்துரையாடுவது முக்கியத்துவம் வாய்ந்ததென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டதாக பீ.பி.சி செய்திவெளியிட்டுள்ளது.
அத்துடன் அணு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான திட்டங்கள் குறித்த கலந்துரையாடல்களை இந்தியா ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 1987 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட கூடங்குளம் அணு தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகள் இரண்டு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என கடந்த வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் நிலவும் மின்சாரப் பிரச்சினை மற்றும் தொடர் மின்தடைகளைக் குறைக்கும் நோக்கிலேயே இந்த அணு தொழிற்சாலை செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் இதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படலாமென சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது...
இந்தியாவுடன் நாம் சிறந்த உறவை பேணிவருகின்றோம் - இலங்கை!
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக இந்தியாவை பழிவாங்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை.
இந்தியாவுடன் நாம் சிறந்த உறவை பேணிவருகின்றோம். உண்மையில் இந்த வரி அதிகப்பினால் இந்தியாவுக்கு நன்மையே கிடைக்கும். ஜெனீவா பிரேரணைக்கும் எமது நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு என்பது அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மட்டுமேயாகும். அதன் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கின்றதா? இல்லையா? என எவருக்கும் கூற வேண்டியதில்லை. அது அரசாங்கத்தை பொறுத்த விடயமாகும்.எனினும் தற்போதைய நிலைமையில் ஆணைக்குழுவின் பந்துரைகளில் அதிகள வான பரிந்துரைகளை அமுல்படுத்தியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் ளூநற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
வாகனங்கள் மீதான வரி அதிகப்பு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இடம்பெற்றதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் இவ்வாறான விடயங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் நானும் இடம்பெற்றுள்ளேன். நாங்கள் இவ்வாறு செய்வோம் என்பதை அவர்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் உணர்த்தியிருக்கவில்லை. நாட்டுக்குத் தேவையானது எனக் கருதப் பட்டதால் இதனை முன்னெடுத்தோம்.
இதேவேளை இந்தியாவை பழிவாங்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை. ஜெனீவா பிரேரணைக்கும் எமது நாட்டின் பொருளாதார விவகாரங்களுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை.
ஜெனீவா விவகாரத்தை எமது நாட்டின் பொருளாதார விவகாரங்களுடன் தொடர்புபடுத்த முடியாது. இந்தியாவுடன் நாம் சிறந்த உறவை பேணிவருகின்ளூறாம். உண்மையில் கூறப்போனால் இந்த வரி அதிகப்பினால் இந்தியாவுக்கு நன்மையே கிடைக்கும் எனவும் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார.
No comments:
Post a Comment