Friday, April, 06, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜே.வி.பி அறிவித்துள்ளது.
ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் மெய்யாகவே விசாரணை நடத்தும் நோக்கில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவில்லை என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை முறியடிக்கும் நோக்கில் ஆணைக்குழு நிறுவப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது முதல், ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சியினர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என முன்னர் அரசாங்கம் அறிவித்த போதிலும், அண்மையில் வெளிவிவகார அமைச்சர் முழுமையாக பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது என தெரிவித்துள்hளர் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment