Tuesday, April, 17, 2012சென்னை::தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சில அகதிகள்
உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 10 பேரே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து பாதுகாப்பு கருதியே தாம் தமிழகத்திற்கு சென்றதாகவும், தமக்கும்
எந்தவொரு பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் தொடர்புகள் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது குடும்பத்தினர் போரினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பத்தில் இருப்பதால், அவர்களை
பராமரிக்க வேண்டிய தேவையுள்ளதால், தம்மை பிணையிலாவது விடுவிக்குமாறு அவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களது இந்தக் கருத்து குறித்து இந்திய அரசாங்க தரப்பின் கருத்தினை பெறமுடியவில்லை என பிபிசியின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment