Friday, April 6, 2012

எல்லை தாண்டி வந்தால் கைது செய்வோம்: ராமேசுவரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படை எச்சரிக்கை!

Friday, April, 06, 2012
ராமேசுவரம்::ராமேசுவரத்தில் இருந்து கடந்த 4-ந்தேதி 300 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ராமேசுவரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர்.

இதனால் பாதியிலேயே மீனவர்கள் கரை திரும்பினர். இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 4-ந்தேதி இந்திய- இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றபோது 4 போர்கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எங்களது படகுகளை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.

இனிமேல் உங்கள் (இந்திய) கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்க இலங்கை எல்லைக்குள் வந்தால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என இலங்கை கடற்படை வீரர்கள் எச்சரித்தனர். இதனால் நாங்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரை திரும்பினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment