Thursday, April 12, 2012

புலிகள் இயக்கத்துக்கு தடை : ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Thursday, April 12, 2012
சென்னை::புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்ததை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று முடிந்தது. தேதி குறிப்பிடாமல் உத்தரவை ஐகோர்ட் தள்ளி வைத்துள்ளது. புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. தடை விதித்தது பற்றி, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகளுக்கான தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்தது செல்லும் என, அந்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, வழக்கறிஞர் புகழேந்தி மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை நீதிபதிகள் தர்மா ராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. வைகோ, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடினர். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட "டிவிஷன் பெஞ்ச்', மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment