Sunday, April 8, 2012

நான்கு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்!

Sunday, April, 08, 2012
இலங்கை::கலேவெல, தமுனுமுல்ல பிரதேசத்தில் நான்கு பெண்கள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குள்ளானவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அயலவர் வீடொன்றில் நேற்றிரவு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டுருக்கும் போது இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

70, 45, 35 மற்றும் 15 வயதான பெண்கள் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment