Monday, April 2, 2012

தமிழர் பிரதேசத்தை அழிக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபாடு: தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா!

Monday, April 02, 2012
இலங்கை::தமிழ் மக்கள் (புலிகள்) எங்கெல்லாம் பலமாக வாழ்கின்றனரோ அப்பகுதிகளை இராணுவ மயப்படுத்தி சிங்கள மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எந்த மண்ணில் நாம் வாழ வேண்டுமென விரும்புகின்றோமோ அந்த மண்ணில் தமிழர்களின் பிரதேசம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் செயற்பாட்டிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் (புலி) கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தந்தை செல்வநாயகத்தின் 114 ஆவது ஜனனதின நிகழ்வுகள் நேற்று முன்தினம் வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவர் டேவிட் நாகநாதன் தலைமையில் இடம்பெற்ற போது சிறப்புரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவித்த மாவை எம்.பி. எமது விடுதலைக்காக எம்மை தொடர்ந்தும் அர்ப்பணிப்போம். அந்த விடுதலையை பெறுவோம் என்ற உறுதிப்பாட்டோடு நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம்.

இந்த இக்கட்டான நிலையிலும் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மிகப் பெரிய பேரழிவு இடம்பெற்ற பின்னும் கடந்த 3 ஆண்டுகளிலும் அரசாங்கத்தினாலும் அவர்களுடைய இராணுவத்தினாலும் தமிழர்களுடைய பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பூமியாக இருப்பது மிகவும் வேதனையும் துக்கமும் நிறைந்த நிகழ்வாகவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாநிலம் தமிழர்களுடைய தாயகம் என்பதை எமக்குக் கற்றுத் தந்த தந்தை செல்வா இந்த நிலத்திலேயே தான் நாம் ஆட்சி செய்ய வேண்டும் என போராட்டம் நிகழ்த்தியன் மூலமும் அவர் எம்மை கட்டி எழுப்பியுள்ளார்.

கிழக்கு மக்களுடன் இணைந்து கடந்த 60 ஆண்டுகளாக போராட்டங்கள் மூலம் ஜனநாயக ரீதியாகவும் இதய பூர்வமாக வடக்கு ,கிழக்கு இணைந்த தமிழர்களுடைய தாயகம் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதனால் அரசாங்கம் தமிழ் மக்கள் எங்கெங்கு பலமாக வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் இராணுவ மயமாக்கி சிங்கள மயமாக்கி எந்த மண்ணில் நாம் வாழ வேண்டுமென நினைக்கின்றோமோ அந்த மண்ணில் தமிழர்களுடைய பிரதேசமென்ற அடையாளங்களை இல்லாது செய்து சமூக அந்தஸ்து தமிழ்ர்களுடையதேசமென்பதை அழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்கின்றது.

தமிழ் மக்களுடைய எந்த நிலங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றனவோ அந்த நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் சம உரிமையுள்ள ஓர் ஆட்சியை முக்கிய தீர்வாக ஏற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும். கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் இன்று ஐ.நா. சபையின் மனித உரிமை அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவை இன்று முக்கியத்துவம் பெற்ற காலகட்டமாக இருக்கின்றது.

அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளினால் மிகவும் குழம்பிப் போய் மீண்டும் ஓர் இனவாத நிகழ்ச்சியை ஒரு பேரவலத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஜனாதிபதியும் ஒவ்வொரு அமைச்சர்களும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாடு நாகரிகமான ஜனநாயகமான நாடு எனின் எழுப்பப்பட்டிருக்கின்ற தீர்மானத்திற்கு கட்டுப்பட்டு அவர்கள் தங்களை ஈடுபடுத்தி நல்லிணக்கத்தை தமிழ் மக்களை சமமாக மதிக்கக் கூடிய உரித்தை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்மறையான கருத்தை பரப்பி வருகின்றார்கள். இது எதிர்காலத்தில் மேலும் மேலும் சர்வதேசத்தின் தலையீட்டை இந்த அரசுக்கு அழுத்தமாக கொடுப்பதற்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் தம்மை வளர்த்து வருகின்றன.

இந்த நம்பிக்கையோடு சர்வதேசத்தை நாம் அரவணைத்து இந்த நாட்டிலே தமிழர்கள் விடுதலை பெற்று இந்த மண்ணில் ஆட்சி செய்யக் கூடிய உரித்தை இந்த நாளில் உறுதிபூண்டு மேலும் மேலும் இந்த நாட்டிற்கு சர்வதேசத்தின் அழுத்தத்தை கொடுத்து அந்த அடிப்படையில் அரசியல் தீர்வை எட்டுவதற்காக அவர்கள் ஒரு தீர்மானம் எடுத்து அரசாங்கமும் சரி இந்த நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகளும் சரி இலங்கையில் இருக்கும் தலைவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை நீக்கி தமிழர்களுடைய நம்பிக்கையை பெறக்கூடிய அளவிற்கு தமிழர்கள் சொந்த தாயகத்தில் ஆட்சி செய்யக் கூடிய காலம் கனிந்துள்ள இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment