Thursday, April 05, 2012இலங்கை::மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியொன்றில் கடன் அட்டையொன்றை பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து 11,000 ரூபாவை திருடிய இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து கடன் அட்டைகளையும் கைப்பற்றினர்.
சந்தேகநபர்கள் இருவரும் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் அங்கஜனின் பிரத்தியோக செயலாளர் யாழில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!
யாழில் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் யாழ். இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ஆறு இலட்சம் ரூபாவை வாங்கி ஏமாற்றி தலைமறைவாக வாழ்ந்து வந்த சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் அங்கஜனின் பிரத்தியோக செயலாளர் ஆத்மராஜன் சாகித் (வயது 28) யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.
இவர் கடந்த ஆறுமாதங்களாக யாழ்.பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் அரியாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மட்டக்களப்பைச் சேர்ந்த இவர் யாழ்.அரியாலைப்பகுதியில் திருமணம் முடித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளிடம் சிறிலங்கா சுகந்திரக் கட்சியினால் ரெலிக்கோம், வங்கியில், ஆசிரியர் தொழில், தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 6 இலட்சம் ரூபாவைக் கொண்டு ஒடித் தலைமறைவாக வாழ்ந்து வந்தவர்
இவரிடம் பணத்தைக் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரின் தேடுதல் வேட்டை தீவிரப்பத்தப்பட்டது. கொழும்பிலும் அங்கஜன் இல்லத்திலும் மற்றும் மட்டக்களப்பிலும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்றைய தினம் யாழுக்கு மாறு வேடத்தில் வந்து தனது அரியாலை இல்லத்தில் தங்கியிருக்கும் போது விசேட புலனாய்வுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்
நாளை இவர் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment