Monday, April 02, 2012நாகர்கோவில்::"சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம் ஜெயலலிதா பாதிக்கப்படுவார்,'' என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். ராமர் பாலத்தை தொடாமல் சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ராணுவ தளபதி வி.கே.சிங் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும். இலங்கை அதிபருக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது மிகமோசமான செயல்.
மின் கட்டணம் உயர்த்தியுள்ளதால் தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு பணம் வருவதாக நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இப்போதுதான் அதை பிரதமர் உணர்ந்துள்ளார். 60 சதவீதம் தோரியம் நமது நாட்டில் உள்ளது. அதை கூடங்குளம் உள்ளிட்ட அணுமின்நிலையங்களுக்கு பயன்படுத்தலாம். சசிகலா மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஜெயலலிதான் பாதிக்கப்படுவார், என்றார்.
No comments:
Post a Comment