Monday, April 02, 2012இலங்கை::கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஒரு காலவரையறையுடன் அமுல்படுத்தும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
ஏசியன் ட்ரிபியுனுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வினையும் அரசாங்கம் வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்படக் கூடாது என தாம் ஒருபோதும் கூறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிகாரங்களை பெறுவதற்கு முன்னர், கிடைக்கின்றவற்றை முதலில் பெற்றுக் கொண்டு, பின்னர் தேவையான விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் கேட்கப்பட்டமைக்கு, வட மாகாணத்தின் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் முழுமை பெற்றதன் பின்னர், தேர்தல் ஆணையாளர் இது குறித்து தீர்மானிப்பார் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதைய தேசிய சனத்தொகை கணக்கெடுப்பும் இதில் கருத்தில் கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றாம் தரப்பு ஒன்றுடன் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த விரும்புவதாக வெளியான தகவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இது காலத்தை வீணடிக்கும் செயல் என்;று டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment