Monday, April, 09, 2012செஞ்சி::இலங்கையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே உருவ பொம்மையுடன் மறியல் செய்ய முயன்ற நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். இலங்கை மட்டகளப்பில் உள்ள பூங்காவில் காந்தியின் சிலையை சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தினர். இதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணாபுரம் தியாகி இப்ராஹிம் தெருவில் வசிக்கும் வடமலை மகன் கிருஷ்ணமூர்த்தி,56, நேற்று காலை 10.30 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டில் தனி ஆளாக திடீரென சாலை மறியலில் உட்கார்ந்தார். போலீசார் இவரை அப்புறப்படுத்தினர்.
பின், மாலை 6.30 மணிக்கு திடீரென காந்தி சிலையை சேதம் தொடர்பாக இலங்கை அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசே கண்டனம் தெரிவி, என்ற பேனருடன், ராஜபக்ஷே உருவ பொம்மையை கயிற்றில் கட்டி, காந்தி பஜார் வழியாக இழுத்து வந்தார். செஞ்சி கூட்ரோட்டிற்கு வந்ததும் உருவ பொம்மையுடன் மறியல் செய்ய முயன்றார். பொதுமக்கள் சிலர் ராஜபக்ஷே உருவ பொம்மையை அடித்தனர். இதற்குள் அங்கு வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியை செஞ்சி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கட்டி இழுத்து வந்த உருவ பொம்மையை ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
No comments:
Post a Comment