Monday, April 16, 2012இலங்கை::நாட்டின் பெளதிக அபிவிருத்தியைப் போன்று எதிர்காலத் தலைமுறையை ஆன்மீக ரீதியிலும் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதியவர்களை மதிக்கும், எம்மைப் பற்றிய தெளிவு கொண்ட, நற்பண்புகள் மிக்க எதிர்காலத் தலைமுறையை நாட்டில் உருவாக்கவில்லையானால் நாம் பெறும் அபிவிருத்தியால் பலன் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாகுலுகமுவ, வெவ்தன்த நவகெலகம புராணரஜமகா விகாரையில் தர்ம போதனை மண்டபத்தை நேற்றுத் திறந்து வைத்து ஜனாதிபதி உரையாற்றினார்.
மதத் தலைவர்களைப் போன்று அரசியல் பிரதிநிதிகளுக்கும் இதற்கான பெரும் பொறுப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதி தொடர்ந்து கூறியதாவது,
இந்நாட்டை சுதந்திரம் அடையச் செய்யும் போராட்டமே கடந்த காலத்தில் இருந்தது. நாம் பயங்கரவாதத்தை ஒழித்து அந்தச் சுதந்திரத்தைப் பெற்றோம். எல்.ரி.ரி.ஈ. இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வில் ஈடுபடுத்தி அவர்களைச் சமூகத்துக்கு பலன்மிக்க பிரஜைகளாக நாம் உருவாக்கினோம்.
இருந்தும் கூட இன்று உலகில் இருந்து எமது தாய்நாட்டைப் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டு வந்து அதன் மூலம் நாட்டைச் சீர்குலைக்க எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர்.
இந்த விடயமாக நாம்அனைவரும் தெளிவாக செயற்பட வேண்டும். இந்த நாட்டைப் பிரித்து, வேறாக்க இடமளிக்க முடியாது. இது ஒரே நாடு. இன்று சகல மக்களும் சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் ஒரே நாட்டில் வாழ்கின்றனர். இனங்களுக்கு இடையில் நம்பிக்கை, ஐக்கியம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாகாண சபை, பிரதேச சபை உட்பட சகல நிறுவனங்களையும் ஒன்றுபடுத்தி நாட்டின் அபிவிருத்தியும் தொடர்ந்து முன் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.
விகாராதிபதி வண. தமாடுவே சராவதிஸ்ஸ தேரர் வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாதிபதி தேவாலயத்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிகு சுவரோவியங்களையும் பார்வையிட்டதோடு மத வழிபாடுகளிலும் பங்குபற்றினார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர, தென் மாகாண அமைச்சர் டி. வி. உபுல், மகா சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment