Friday, April 13, 2012

பத்து கடவுச்சீட்டுக்களுடன் கிளிநொச்சி இளைஞர் கைது!

Friday, April, 13, 2012
இலங்கை::10 கடவுச் சீட்டுக்களுடன் சிலாபம் நகரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டுகளும் ஜெர்மன் நாட்டிற்கான ஐந்து விமான பயணச் சீட்டுககளும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் குறிப்பிட்டார்.

22 வயதான கிளிநொச்சி பிரதேசத்தை சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment