Sunday, April 15, 2012புதுடில்லி::லோக்சபா பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி., க்கள் அடங்கிய குழு, நாளை (16ம் தேதி) ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்கிறது. இந்திய எம்.பி.,க்களின் இப்பயணம், உலகம் முழுவதும் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும், இருநாட்டு அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெ., முடிவு ஏன்? அவரது பேச்சு, இலங்கை செல்லவுள்ள எம்.பி.,க்கள் குழு மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இலங்கை பயணத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ள முதல்வர் ஜெயலலிதா, "இலங்கை பயண நிகழ்ச்சி நிரலை பார்க்கும்போது, இது ஏதோ சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் சுற்றுப்பயணம் போலவும், இலங்கை அரசால் அவர்களுக்கு சாதகமாக ஒரு கருத்து, இந்தியாவில் ஏற்பட தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலாகவும் தெரிகிறது. நேரில் காணும் யதார்த்தங்களை இலங்கை அதிபரிடம் விவாதம் செய்ய வாய்ப்புத் தரப்படவில்லை. இலங்கை அதிபருடன் விருந்துண்டு, பரிசுப் பொருட்கள் பெற்றது போல் கண்துடைப்பாகி விடும்' என்று குறிப்பிட்டிருந்தார். இதனால், இலங்கை செல்லவுள்ள எம்.பி.,க்கள் குழு, உண்மையில் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நேரில் பார்க்கட்டும்: இதுகுறித்து, தி.மு.க., சார்பில் குழுவில் இடம் பெற்றுள்ள டி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது, ""இலங்கைக்கு இந்திய அரசு, 500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது. இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று, பார்லிமென்டில் கேள்வி எழுப்பியபோது, அதை எம்.பி.,க்கள் குழுவே பார்த்து வரட்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தான், சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. அங்கு, போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரையும் சந்தித்துப் பேசுவது என்பது இயலாத காரியம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவர்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன நிலைமை இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
தர்க்கம் செய்ய முடியாது: தமிழர் வாழும் பகுதிகளில், ஒரு சில இடங்களை மட்டுமே பார்க்க வாய்ப்புள்ளது. மேலும், அண்டை நாட்டு உறவுடன் தொடர்புடைய ஒரு பயணத்தில், அந்த நாட்டு அதிபருடன் அங்குள்ள நிலைமைகள் குறித்து வாதம் செய்யவோ, தர்க்கம் செய்யவோ வாய்ப்பிருக்காது. அண்டை நாட்டு பிரதிநிதிகள் என்ற முறையில், ஒரு எல்லைக்குட்பட்டு மட்டுமே பேச முடியும். அதை எம்.பி.,க்கள் குழு செய்யும்.
டீ தூள் மட்டுமே: கடந்த முறை சென்றபோது, தி.மு.க., சார்பில் நானும் சென்றிருந்தேன். அப்போது, அதிபர் ராஜபக்ஷே சார்பில், குழுவில் இடம் பெற்றவர்களுக்கு டீ தூள் பாக்கெட் தான் தரப்பட்டது. அதை பரிசுப் பொருளாக வாங்கி வந்தவர்கள் கண்டபடி விமர்சித்தனர்,'' என்றார்.
No comments:
Post a Comment