Wednesday, April 4, 2012

நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஐந்து கான்ஸ்டபிள்கள் தற்காலிகப் பணி நீக்கம்!

Wednesday,April,04,2012
இலங்கை::கண்டி - ரங்கல பொலிஸ் நிலையத்தின் ஐந்து கான்ஸ்டபிள்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாக அவர்களுக்கு தற்காலிகப் பணி நீக்கம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

நபரொருவரைத் தாக்கி வாகனத்திற்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கண்டி - ரங்கல பொலிஸ் நிலையத்தின் ஐந்து கான்ஸ்டபிள்கள் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment