Sunday, April 01, 2012இலங்கை::கிழக்கு மாகாணசபையானது பல்வேறு துறைகளிலும் துரித வளர்ச்சியடைந்து வருவதாக கிழக்குமாகணசபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டு. ஈரலைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
கடந்த காலங்களில் நாம் உணர்ச்சி வார்த்தைகளை நம்பி ஏமாந்த சமூகமாக மாறியிருக்கின்றோம். அதனைவிட கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றோம்.
அதைவிட அதைப்பெற்றுத் தருவோம் இதைப்பெற்றுத் தருவோம் என்றெல்லாம் எத்தனையோ உறுதிமொழிகளை எல்லாம் சொன்ன தமிழ்த் தலைவர்கள் இதுவரை தமிழர்களுக்காக எதனையும் பெற்றுத்தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கும் மேலாக உரிமை உரிமை என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் உரிமைகளையும் பெற்றுத்தரவுமில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்து தரவுமில்லை. இவர்களுடைய நடவடிக்கை தொடர்பாக எமது மக்கள் தெளிவாக இருக்க வேண்டும், நாம் அழிவுகளை சந்திக்க முடியாது. எமது பிரதேசங்கள் துரித அபிவிருத்தி அடைய வேண்டும்.
என்று நாம் ஒரு பக்கத்தில் எமது உரிமைகளைப் பெறுவதில் பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருகின்ற அதே நேரம் மறு புறத்தில் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதிலும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான துரித வளர்ச்சியையே சகல துறைகளிலும் நானும் எமது கட்சியும் எதிர்பார்ப்பதாகவும். அதற்கிணங்கவே கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் என்ற ரீதியில் தானும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment