Saturday, April, 14, 2012கலிபோர்னியா::அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் மாவட்டத்தைச்சேர்ந்தவர் ராகுல்ஷர்மா(20). இவரது உறவினர்கள் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளனர். ராகுல்ஷர்மா, தனது தந்தை பாரன்ஷர்மா, தாய் தேவேந்தர் ஷர்மா, இரு சகோதரிகள் ஆகியோருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் பிரிமவுண்ட் நகரில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சொந்த விஷயமாக தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றார். பிரிமவுண்ட் சென்டர்வெலி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.இது தொடர்பாக பிரிமவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இனவெறியால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராகுல்ஷர்மா சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவில் உள்ள பஞ்சாப் வாழ் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment