Monday, April 02, 2012இலங்கை::தமிழகத்தில் மூன்று ரகசிய முகாம்களில் ஆயுதப்பயிற்சிகளை பெற்ற 150 பேர், வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு சென்று மறைந்திருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவும், பிரதேசத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கவும் இவர்கள் அங்கு சென்றுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
திருகோணமலையில் ஈபிடிபி உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணைகளில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. இவர்கள் மூன்று பேரும் ஒருகாலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய நபர்களாக இருந்துள்ளனர். விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பின்னர், படகு இந்தியாவுக்கு சென்று தலைமறைவாகியிருந்தனர்.
பின்னர், தமிழகத்தில் உள்ள ரகசியமான புலிகளின் மூன்று முகாம்களில் பயிற்சிகளை பெற்று, ரகசியமான முறையில் இலங்கை சென்றுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. வடக்கு கிழக்கில் நடந்த மர்மான கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கொலைகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் இவர்களுக்கு தொடர்புர் இருப்பதாகவும் காவற்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன் மீனவர்கள் போல், படகுகள் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு இந்த சந்தேக நபர்கள் பிரவேசித்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈபிடிபி உறுப்பினர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி ஈபிடிபி உறுப்பினரை கொலை செய்த பின்னர்,அவரது சடலத்திற்கு அருகில் காணப்பட்ட துரோகிகளுக்கு மரண தண்டனை நாம் மீண்டும் பணிகளை ஆரம்பித்து விட்டோம் என்ற வாசகம் குறித்து பாதுகாப்பு தரப்பினர் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த கொலையின் பின்னர், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்து அது தோல்வியடைந்த பின்னர், பாதுகாப்பு தரப்பினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் தாம் மூன்றும் பேரும், இந்தியாவில் ஒரே முகாமில் பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment