Monday, April, 09, 2012சென்னை::இந்தியாவில் புலிகளின் அமைப்புக்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி 2010-ம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மத்திய தீர்ப்பாணையத்தின்படி (புலி)வைகோவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மாராஜ், வேணுகோபால் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
விவாதத்தின் போது வைகோ, இலங்கையில் நடந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி, புலிகளுக்கு இந்தியாவில் தடை விதிப்பது சரியல்ல. 2010-க்குபின் புலிகளால் இந்தியாவில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
இந்த விசாரணையில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரண்டரை மணி நேரம் நடந்த விவாதத்தைத் தொடர்ந்து இவ்வழக்கை ஏப்.11-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment