Sunday, March 25, 2012

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உலகில் திணிப்பதற்கு இலங்கை மீது ஒத்திகை: பலிக்கடாவான நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைந்தமை துரதிஷ்டமானதே, தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாரில்லை-இலங்கை!

Sunday, March 25, 2012
இலங்கை::சிறிய நாடான இலங்கை மீது தனது வெள்ளோட்ட ஒத்திகையைச் செலுத்தி யிருக்கும் அமெரிக்கா நாளைய உலகின் ஏனைய நாடுகள் மீதும் தனது தன்னிச் சையான தீர்மானங்களைக் கொண்டு வந்து சகல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கையை மறைமுகமாக எடுத்து வருகின்றது.

இது புரியாமல் இருபத்து நான்கு நாடுகள் தமக்குத் தாமே சேற்றை அள் ளித் தமது தலைகளில் போட்டுள்ளன. உண்மையில் இலங்கைக்கு ஆதரவாக அதேசமயம் அமெரிக்காவின் கபடத்தனமான செயற்பாட்டுக்கு எதிராகத் துணிவுடன் வாக்களித்த நாடுகளைப் பாராட்ட வேண்டும்.

ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து அரசாங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவ்விடயம் குறித்து அமைச்சர்கள் சிலரிடம் கேட்டறியப் பட்ட கருத்துக்களை வாசகர்களுக்காகத் தருகின்றோம்.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க :-

இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சில கட்சிகள், குழுக்களுடன் இணைந்து அரசியல் நோக்கத்துக்காக கொண்டுவரப்பட்ட ஒன்றாகவே பிரேரணையை இலங்கை நோக்குகிறது. இலங்கை ஏனைய நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயார்.

கண்ணாடி வீட்டுக்குள் இருப்பவர்கள் கல் எறிய முயற்சிப்பதால் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியுள்ளதே தவிர அது பற்றி அரசாங்கம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. நாம் எமது நாட்டில் எமது பணிகளை வழமைபோன்று தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம். அதற்கு எமக்கு எவரும் கட்டளையிடத் தேவையில்லை.

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், கொள்கைகளில் மாற்றம் கிடையாது. அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். ஜெனீவா தீர்மானம் அரசாங்கத்தின் கொள்கைகளிலோ நடவடிக்கைகளிலோ மாற்றத்தை ஏற்படுத்தாது.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களை அரசாங்கம் ஆரம்பித்தது. இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம், முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல், தமிழ் பேசும் காவல் துறையினரை இணைத்துக் கொள்ளல், யுத்த வலயத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேற்குலக நாடுகளின் கடுமையான தலையீடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் காலகட்டத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் அதனை முற்று முழுதாக குழப்பி சதி செய்வதற்கு எவ்வாறு தமது தந்திரோபாய வழிகளை மேற்கொண்டனவோ அது போன்றே இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் நிகழ்ச்சி நிரல் அமையப் பெற்றிருந்தது. குறிப்பாக இந் நாட்டின் இலவசமாக வழங்கப்படும் கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அனுபவித்து விட்டு அற்ப சொற்ப டொலர்களுக்காக தமது தாய் நாட்டை காட்டிக் கொடுக்கும் கும்பல்களானது சர்வதேச எதிர்ப்பு சக்திகளையும் விடவும் பலம் வாய்ந்ததாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் மிகவும் முக்கியமான தேவையாக விளங்கிய இலக்கை அடைந்துள் ளது. ஆகவே ஏனைய இலக்குகளையும் நாம் இலேசாக அடைந்து விடுவோம். தமது தாய் நாட்டை நேசிக்கும் மக் களின் ஆதரவுடன் சர்வதேச சமூகத் தினரால் முன்வைக்கப்படும் எந்த வோர் அழுத்தத்திற்கும் முகம் கொடுக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் தயா ராகவுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ :

மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் நாட்டையும், மக்களையும் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டு மக்களின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்திக் கொடுத்த இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சி தருகிறது.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் 2009 இல் அவசரகாலச் சடடம் நீக்கப்பட்டது. 11900 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் நீக்கம், கையேற்கப்பட்ட வீடுகள் மீள பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. நாட்டை விட்டுச் சென்ற 20,000 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் மேற்படி அடிப்படை நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு விடயங்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத் தின் மீது பல்வேறு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சி தரு கிறது.

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் :

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் பதினைந்து நாடுகள் இலங்கைக்கு சார்பாக வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் 15 நாடுகள் இலங்கைக்கு சார்பாக பிரேரணையை எதிர்த்து வாக்களித்தமை பெரும் திருப்தியளிக்கிறது. அந்நாடுகள் மீது பல்§று வகையில் செலுத்தப்படட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தமை எமக்கு பெரும் திருப்தியளிக்கிறது. அந்நாடுகளுக்கு எமது நன்றியையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த :

நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படும் எந்த ஒரு சவால்களுக்கும் முகம் கொடுக்க அரசாங்கமும் தயாராக உள்ளது. யுத்தம் வென்றது போன்று தாய் நாட்டை நேசிக்கும் மக்களின் ஆதரவுடனும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உதவிகளுடனும் இந்தப் பாரிய சவால்களையும் வெற்றி கொள்வது உறுதி. இலங்கைக்கு எதிராக எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எக்காரணத்தைக் கொண்டும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அரசாங்கத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின் போது இதுபோன்ற பல்வேறு அழுத்தங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய, மலைநாடு என்று நாட்டின் சகல பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைக் கொண்ட ஐ. ம. மு. . அரசாங்கம் பொது மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றது. அந்த அடிப்படையில் இதுபோன்ற சகல சவால்களையும் முகம் கொடுக்கும், பாரிய சக்தி ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உண்டு.

அமைச்சர் டலஸ் அழகப் பெரும :

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா தனது ஆதரவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழக முன்னாள் முதல்வரும் தி. மு. க. வின் தலைவருமான கருணாநிதியினால்தான் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவு வழங்காவிட்டால் தனது கட்சி மத்திய அரசிலிருந்து விலகும் என கருணாநிதி அச்சுறுத்தியதன் காரணமாகவே இந்திய மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதற்காக இந்தியா அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக உள்ளூர் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவே அது ஆதரவைத் தெரிவித்தது. ஆகவே இந்தியாவை விட்டு விட்டு நாங்கள் கணக்கில் கொண்டோமானால் 23 நாடுகள் மட்டுமே எமக்கு எதிராக வாக்களித்தன.

இவற்றில் 11 நாடுகள் ஐரோப்பிய நாடுகள். 6 நாடுகள் தென்னமெரிக்க நாடுகள். ஏனையவை 6நாடுகள். இந்தியா எமது நாட்டின் அபிவிருத்திக்குத் தொடர்ந் தும் உதவிகளை வழங்கும். அதனை அந்த நாடே வெளிப்படையாகத் தெரிவித் துள்ளது.

எமது நாட்டில் நிலவி வந்த மூன்று தசாப்த கால யுத்தத்துக்கு முடிவு கட்டி இன்று நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு எவரினது அச்சுறுத்தலும் இல்லை.

No comments:

Post a Comment