Tuesday, March 27, 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது , இந்த விஷயத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லை - அப்துல் கலாம்!

Tuesday, March 27, 2012
இந்தூர்::நெல்லை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது , இந்த விஷயத்தில் எந்தவொரு பிரச்னையும் இல்லை என இந்தூரில் நிருபர்களிடம் பேசுகையில் அப்துல் கலாம் இதனை தெரிவித்தார்.

மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்ததும் நிருபர்கள் குறுக்கிட்டு பல கேள்விகளை கேட்டனர். அப்போது அவர் பதில் அளிக்கையில்; கூடங்குளம் அணுமின் நிலையம் முழு பாதுகாப்பானது. இதில் எவ்வித பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை. நான் கடந்த முறை கூடங்குளத்திற்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்தேன். இதில் குறைபாடுகள் எதுவும் இல்லை . முழு திருப்தியாக உள்ளது. இவ்வாறு கலாம் தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூடங்குளத்தை ஆய்வு செய்த போது இது வரப்பிரசாதம் என்றார். இதனையும் கூடங்குளம் போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

கறுப்பு கொடி காட்ட முயற்சி: 10 பேர் கைது ; இந்நிலையில் கலாமுக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக அந்த கும்பல் கோஷமிட்டனர்..

கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் : ரஷ்யா அறிவிப்பு!

வள்ளியூர்: கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் காடாகின் கூறியுள்ளார். முதல் இரண்டு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகவே இந்த புதிய அணு உலைகள் அமையும் என்று தெரிவித்த அவர், இவற்றிக்கு இந்திய அரசு கொண்டு வந்துள்ள அணு விபத்துக்கள் இழப்பீடு சட்டம் பொருந்தாது என்றும் தெரிவித்தார். கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததை வரவேற்பதாகவும் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment