Saturday, March 24, 2012

பயங்கரவாதத்தை ஆயுதங்கள் மூலம் அழிக்க கூடாது என்ற செய்தியை மேற்குலக நாடுகள் ஏனைய நாடுகளுக்கு வழங்கியுள்ளன - டளஸ் அழகப்பெரும!

Saturday, March 24, 2012
இலங்கை::மேற்குலக நாடுகளுக்கு அடிப்பணியும் பயங்கரவாதத்தை ஆயுதங்கள் மூலம் அழிக்க கூடாது என்ற செய்தியை இலங்கைக்கு எதிராக நேற்று முன்தினம் நிறைவேற்றிய யோசனை மூலம், மேற்குலக நாடுகள் உலகில் உள்ள ஏனைய நாடுகளுக்கு வழங்கியுள்ளன என இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் நேற்று நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறி, மேற்குலக நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக யோசனை ஒன்றை கொண்டு வந்தன. இந்த யோசனையின் முடிவு என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் 23 நாடுகள் இந்த யோசனைக்கு இணங்கவில்லை என்ற விடயத்தை முதலில் கூறவேண்டும். 23 நாடுகளில் 15 நாடுகள் யோசனைக்கு எதிராக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

யோசனைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்தன. இலங்கையின் உள்நாட்டில் அல்லது மனித உரிமை பிரச்சினை இருப்பதன் காரணமாக இந்தியா இந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. இந்தியாவில் உள்விவகாரங்கள் இருக்கின்றன. இந்தியாவின் ஆளும் கட்சி பல அரசியல் கட்சிகளை இணைத்தே ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சிகளில் கருணாநிதி அவர்களின் கட்சி, யோசனைக்கு எதிராக வாக்களித்தால், தமது உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி விடுவார்கள் என இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்தார். இதன் காரணமாகவே இந்தியா யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதனை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். யுத்தத்தின் மிகவும் தீர்;க்கமான கட்டத்தில், தமிழகத்தில் 2 மாதங்கள் பாடசாலைகள், சினிமாக்கள் மூடப்பட்டு, நடிகர்கள், இயக்குனர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சட்டத்தரணிகள், நீதிபதிகள், நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.இவ்வாறான சந்தர்ப்பத்தில், புலிகளை தோற்கடிக்க இந்தியா, இலங்கைக்கு உதவியதை மறந்து விடக் கூடாது. இதனால், ஜெனிவா யோசனையுடன் இதனை பின்னிக்கொள்ள கூடாது எனவும் அமைச்சர் அழகப்பெரும மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment