இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை- லக்ஷ்மன் யாப்பா!:இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்!
Friday, March 23, 2012இலங்கை::ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று தகவல், ஊடகத்துறை பதில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரு மான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஜெனீவா விவகாரத்தை வைத்து சிலர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்ற போதிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வுகளுடன் செயற்படுகின்றன.
இந்தியாவின் உள்நாட்டுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளமை தெளிவாக தெரிகின்றது. இந்நிலையில் அவர்களது ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வை எடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு அவற்றை குற்றம் கூற முடியாது.
மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. நாங்களாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நாடாக இருந்தாலும் தமது ஆட்சியை பாதுகாத்துக் கொண்டே ஏனைய நாட்டும் உதவி செய்ய முன்வரும் என்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பலம் வாய்ந்தது.
எமது பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடுகளில் ஒன்று அந்த அடிப்படையில் இந்தியாவின் உதவி எமக்கு எப்போதும் தேவைப் படுகின்றது. அவர்கள் தங்களது உள்நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு எந்த ஒரு தீர்மானங்களை எடுத்தாலும் பரவாயில்லை, அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்பது எமது பொறுப்பாகும்.
எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி, ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் என்றார்.
இதேவேளை அமெரிக்காவுக்கோ ஏனைய வெளிநாடுகளுக்கோ இடையில் இலங்கைக்கும் இடையில் எந்த விதமான பிரச்சினைகள் கிடையாது.
எனினும் ஜெனீவா விடயத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட விதத்திற்கு உரிய பதில்களை வழங்கினோர். இந்த செயற்பாடுகளானது இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளுக்கும் எந்த பதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment