Tuesday, March 27, 2012

அரசியல் தீர்வு தாமதத்திற்கு தமிழ் கூட்டமைப்பின் இழுத்தடிப்பே காரணம் - நிமல் சிறிபால டி சில்வா!

Tuesday, March 27, 2012
இலங்கை::அரசியல் தீர்வு தாமதமாவதற்கு அரசாங்கம் காரணமல்ல. பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை நியமிக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே காலங்கடத்துவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஐ. நா. மனித உரிமைப் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. ஊடகவியலாளர் கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது :- அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்ப தற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு வொன்றை அமைத்துள்ளோம்.

இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தராதுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு அழைப்பு விடுத்தாலும் இதுவரை யாரும் நியமிக் கப்படவில்லை.

அரசியல் தீர்வு தாமதமடைவதற்கு நாம் காரணமல்ல. தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு கூறும்படி நாம் புலம்பெயர் அமைப்புகளிடமும் கூறினோம். ஜெனீவா வில் சக நாடுகளுக்கும் இது குறித்து அறிவூட்டினோம்.

பாராளுமன்றத் தெரிவுக் குழு 6 மாதங் களே செயற்படும். 6 மாதத்தில் அதன் அறிக்கை கையளிக்கப்பட வேண்டும். கடந்த கால முயற்சிகள் போன்று பாராளு மன்றத் தெரிவுக் குழுவுக்கு நீண்ட காலம் பிடிக்காது. இது தீர்வுக்கான சிறந்த அவகாசமாகும்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றியும் தீர்வு யோசனை குறித்துப் பேசினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை அனுப்பாது எவ்வாறு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியும்? என்றார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்,

தீர்வு யோசனையை அமுல்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் இதற்காக பாராளுமன்றத் தில் 2/3 பெரும்பான்மையாக யோசனை நிறைவேற்றப்படுவதோடு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். எனவே இதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பதே ஒரே வழியாகும். இதனைத் தவிர வேறு மற்aடு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment