Thursday, March 22, 2012

அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

Thursday, March 22, 2012
இலங்கை::ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற கட்டடத் தொகுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

பிரதமர் உள்ளிட்ட அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றவர்களுக்கு எதிராக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமது இடதுகைகளில் கறுப்புப்பட்டி அணிந்து இவர்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதுடன், பல்வேறு கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

No comments:

Post a Comment