Saturday, March 24, 2012

இந்திய பல்கழைக்கழகங்களில் பட்டப்படிப்புக்களை பயின்ற இலங்கை மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு!

Saturday, March 24, 2012
இலங்கை::இந்தியா ஒவ்வொரு வருடமும் 150 இலங்கைக்கு மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள பல பல்கழைக்கழகங்களுக்குச் சென்று பட்டப் படிப்பினைக் கற்றுவருவதற்கு புலமைப்பரிசில்களை வழங்குகின்றது.
கடந்த மூன்று வருடத்திற்கு இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டத்திற்காக 2.5பில்லியன் ருபாவை இந்தியா செலவழித்துள்ளது. என இந்தியாவுக்கான உயர் ஸ்தாணிகர் அசோக் கே காந்த தெரிவித்தார்.

இந்தியாவிற்கு சென்று அங்குள்ள பல்கழைக்கழகங்களில் சென்று பட்டப்படிப்புக்களை பயின்ற இலங்கை மாணவர்கள் ஒன்று கூடல் நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டடலில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். இந்தியாவில் உயர்கல்வி கற்றவர்களும் கொழும்பில் உள்ளவர்களுமான 300 பேர் இக் ஒன்று கூடலில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய உயர் ஸ்தாணிகர் மேலும் அங்கு உரையாற்றுகையில் இந்தியாவின் கல்விக்காக முதன் முதலில் மகாத்மா காந்தியுடன் சேர்ந்து சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவரும் இந்தியாவின் முதல் கல்வியமைச்சராகப் மௌலானா ஆசாட் கலாம் பணியாற்றினார்.

அவர் ஞாபகாத்தமாக 50 புலமைப்பரிசில் மகாத்மா காந்தி ஞாபகாத்த புலமைப்பரிசில் ரஜிவ் காந்தி, நேரு ஆகியோர் ஞாபகாத்தமாக புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றது. ஓவ்வொரு வருடமும் பெப்ரவரியில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. என உயர் ஸ்தாணிகர் தெரவித்தார்.

No comments:

Post a Comment