Monday, March 26, 2012இலங்கை::சிலாபம் - மாதம்பை பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் மனைவியொருவர் உயிரிழந்துள்ளார்.
20 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கணவன் நஞ்சு அருந்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேகநபர் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனிப்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment