Monday, March 26, 2012இலங்கை::உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகளின் உதவி அவசியமற்றது என அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்போ அல்லது எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போ அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்கழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு சர்வதேச சமூகம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு முன்னதாகவே, நடைமுறைச் சாத்தியமுடைய அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்துவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கம் பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக சில அரசியல் கட்சிகள் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில பரிந்துரைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் சகல விடயங்களையும் அரசாங்கம் அமுல்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளக் கூடியதும், நடைமுறைச் சாத்தியப்பாடுடையதுமான பரிந்துரைகள் மட்டுமே அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவிற்கோ அல்லது வேறும் எந்த நாட்டுக்கோ பதிலளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்..
No comments:
Post a Comment