Tuesday, March 27, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது – இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளடீமீர் மிகாயலோவ்!

Tuesday, March 27, 2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பேரவையின் நன்மதிப்பிற்கு ஏற்பட்ட களங்கமாகவே ரஸ்யா கருதுகின்றது என இந்தியாவிற்கான ரஸ்ய தூதுவர் அலெக்ஸான்டர் கடாகின் தெரிவித்துள்ளார்.

நாடுகளின் அடிப்படையில் ஏன் திடீரென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏதேனும் ஓர் நாட்டின் மீது மற்றுமொரு நாடு அழுத்தங்களை பிரயோகிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இலங்கையின் சகவாழ்வுக்கு, சர்வதேச தலையீடுகள் மூலம் அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாது என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விளடீமீர் மிகாயலோவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புலிகளை தோற்கடிக்க இலங்கை அரசாங்கத்திற்கு, ரஷ்ய பெரும் உதவிகளை வழங்கியது. இந்த நிலையில், இலங்கையில் தேசிய ரீதியாக சகவாழ்வை ஏற்படுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இதன் போது, இலங்கையின் கோரிக்கைக்கு அமைய, ரஷ்ய நட்பு ரீதியான உதவிகளை வழங்கும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் உரிமை இலங்கைக்கே உள்ளது. அவ்வாறான விசாரணையின் போது, இராணுவ தலையீடுகள் இருக்கக் கூடாது. அத்துடன் மனித உரிமை மீறல் என்ற விடயம் அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் அதனை ரஷ்ய எதிர்ப்பதாகவும் ரஷ்ய தூதுவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment